முகப்புகோலிவுட்

ரீ-ரிலீஸாகும் விஜயின் 50-வது படம்..! கேரளா ரசிகர்கள் கொண்டாட்டம்...

  | January 14, 2020 12:43 IST
Thalapathy Vijay

துனுக்குகள்

 • சுறா திரைப்படம் 2010-ஆம் ஆண்டு வெளியானது.
 • இப்படத்தை எஸ்.பி. ராஜ்குமார் இயக்கினார்.
 • இப்படத்துக்கு மணி சர்மா இசையமைத்துள்ளார்.
‘தளபதி' விஜயின் 50-வது திரைப்படமான ‘சுறா' கேரளாவில் மறு வெளியீடு செய்யப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ‘பிகில்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து நடிகர் விஜய் ‘கைதி' புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிருப்பாக நடைபெற்றுவர, இந்த கோடை கால கொண்டாட்டத்துக்கு இப்படம் வெளியாகும் என எதிரபார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஜய், தமன்னா மற்றும் வடிவேலு நடிப்பில் 2010-ஆம் ஆண்டு வெளியான ‘சுறா' திரைப்படம் மீண்டும் வெளியிடப்படுகிறது. இப்படத்தின் 10-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் கேரள விஜய் ரசிகர்கள், கொல்லம் பகுதியில் இருக்கும் ஜி-மேக்ஸ் சினிமாஸ் திரையரங்கில் வெளியிடுகின்றனர். இம்மாதம் 26-ஆம் தேதி (குடியரசு தினத்தன்று) வெளியாகவுள்ள நிலையில், கேரளா விஜய் ரசிகர்கள் மிக உற்சாகமாக டிக்கட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்த புதிய சகாப்தத்தில் விஜய்க்கு இது முதல் மறு வெளியீடாகும். டிக்கட்டுகள் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளலாம் என தொலைப்பேசி எண்களை குறிப்பிட்டு, கேரளாவில் கொல்லம் நான்பன்ஸ் (விஜய் ரசிகர்கள் குழு) ட்வீட்டை வெளியிட்டுள்ளது.
‘சுறா' திரைப்படம் 2010-ஆம் ஆண்டு, ஏப்ரல் 30-ஆம் தேதி உலகளவில் வெளியானது. இப்படம் எஸ்.பி. ராஜ்குமார் இயக்கத்தில், சங்கிலி முருகனின் முருகன் சினி ஆர்ட்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்டது. இபடத்துக்கு மணி சர்மா இசையமைத்திருந்தார். விஜயின் 50-வது படத்தில் தமன்னா, வடிவேலு, ரியாஸ் கான், தேவ் கில், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் வெளியானபோது, எதிர்பார்த்த அளவிற்கு ஓடாமல் ஃப்ளாப் ஆனது குறிப்பிடத்தக்கது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com