முகப்புகோலிவுட்

விஜய்யுடன் மோதும் விஜய் சேதுபதி; தாக்குப்பிடிப்பாரா மக்கள் செல்வன்!

  | July 11, 2019 17:35 IST
Bigil

துனுக்குகள்

  • விஜய்சேதுபதி நடிப்பில் கடைசிவிவசாயி வெளியாக இருக்கிறது
  • ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் முதல் முறையாக பிகில் படத்தில் பாடுகிறார்
  • பிகில் படம் தீபாவளி அன்று வெளியாவது உறுதி

அட்லி இயக்கத்தில் விஜய்-நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில்'. இந்த படத்தில் கதிர், யோகி பாபு, சத்யராஜ், ஆனந்த் ராஜ், விவேக் இன்னும் பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். கால்பந்தாட்டத்தை மைய்யமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

படப்பிடிப்பை வருகின்ற ஆகஸ்ட் இறுதியில் முடித்து இந்தாண்டு தீபாவளி அன்று படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படு வைரலானது. இதனைத் தொடர்ந்து பிகில் படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் முதல் முறையாக வெறித்தனம் பாடல் ஒன்றை விஜய் பாடி இருக்கிறார் என்றும் புதிய அப்டேட்டுகள் வந்தன.
 

6v4tburo

இந்த படத்தைப்போலவே இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா நிவேதா பெத்துராஜ் அகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் சங்கத்தமிழன். விறுவிறுப்பாக நடந்து வரும் படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்து படத்தை வரும் தீபாவளி அன்றே வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
 

0cnjb5ro

இதனால் இரண்டு படங்களுக்கிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் வசூல் வேட்டையை நடத்தியது. தற்போது உருவாகி வரும் பிகில் படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்க விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் படம் தாக்குபிடிக்குமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இருப்பினும் சங்கத்தமிழன் வெளியீட்டு தேதியை படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்