முகப்புகோலிவுட்

இயக்குனர் தங்கையை காதல் திருமணம் செய்யும் சதீஷ்..!

  | November 22, 2019 11:23 IST
Sathish

துனுக்குகள்

  • ‘தமிழ்படம்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் சதிஷ்.
  • விஜயுடன் நடித்த கத்தி திரைப்படத்துக்காக எடிசன் விருது பெற்றுள்ளார்.
  • அடுத்ததாக திமைதான் வெல்லும், டெட்டி உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார்
காமெடி நடிகர் சதிஷுக்கு திருமனத் தேதி நிச்சயமாகியுள்ளது.

நடிகர் சதிஷ் சி.எஸ் அமுதன் இயக்கிய முதல் தமிழ் ஸ்போஃப் படம் ‘தமிழ்படம்' மூலம் அறிமுகமானவர். இவர் மதராசப்பட்டினம், மெரினா, தாண்டவம், வதிக்குச்சி, வை ராஜா வை, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆமபல என பல படங்களில் நடித்துள்ளார். இவர் விஜயுடன் சேர்ந்து கத்தி, பைரவா படங்களிலும் நடித்துள்ளார். கத்தி, தங்க மகன், ரெமோ, தமிழ்ப்படம் 2 ஆகிய படங்களுக்காக எடிசன் விருதுகளையும் பெற்றுள்ளார்.

அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இனைந்து காமெடியில் கலக்கி வரும் சதிஷுக்கு திருமனம் நிச்சயமாகியுள்ளது. அவர் நிச்சயதார்த்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகிவருகிறது. சிக்ஸர் பட இயக்குனர் சச்சுவின் தங்கை தான் மனப்பெண் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பண்ணீர் செல்வம் ஆகியோரை நேற்று நேரில் சந்தித்து பத்திரிக்கையைக் கொடுத்து தனது திருமனத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்துவரும் சதீஷுக்கு, ஆயிரம் ஜென்மங்கள், சீறு, கண்ணை நம்பாதே, 4G, ராஜவம்சம், பூமி, பிஸ்தா, ரங்கா, தீமைதான் வெல்லும், டெட்டி என வரிசையாக படங்கள் காத்திருக்கிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்