முகப்புகோலிவுட்

வேற லெவல் மாஸ்...!! மிரட்டும் மாஸ்டர் 2-வது போஸ்டர்..!

  | January 15, 2020 17:34 IST
Master

துனுக்குகள்

  • ‘மாஸ்டர்’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
  • இப்படத்த்தில் விஜய் சேதிபதி வில்லனாக நடிக்கிறார்.
  • இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
‘தளபதி' விஜயின் ‘மாஸ்டர்' திரைப்படத்தின் 2nd look poster வெளியாகி வைரலாகிவருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'மாஸ்டர்' . விஜயின் இந்த 64-வது படத்தில், அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக ஆண்ட்ரியா ஜெரமியா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க, மேலும் ஷாந்தனு பாக்கியராஜ், கௌரி ஜி கிஷன், கைதி படப் புகழ் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டமாக அமைந்தது.
இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகையான இன்று இப்படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த மாஸான போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. “ஹாப்பி பொங்கல் நண்பா”...!!

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்