முகப்புகோலிவுட்

இன்று தொடங்குகிறது ‘மாஸ்டர்’ எடிட்டிங்‌.!

  | May 12, 2020 12:40 IST
Master

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மாஸ்டர்'

கொரோனா வைரஸ் தொற்று பரவலால், படப்பிடிப்பு மற்றும் திரைப்பட தயாரிப்பு பணிகள் அனைத்தும் மார்ச் 19 முதல் நிறுத்தப்பட்டன. இருப்பினும், நேற்று முதல் அரசாங்கம் விதித்துள்ள சில கட்டுப்பாடுகளுடன் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகளைத் தொடங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. இந்த முடிவுக்காக காத்திருந்த பல படக்குழுவினர், உடனடியாக வேலையை தொடங்கியுள்ளன. சினிமா பணிகள் 52 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

FEFSI-ன் அறிக்கையின்படி நேற்று, கமல்ஹாசனின் ‘இந்தியன் 2', த்ரிஷாவின் ‘ராங்கி', விஷாலின் ‘சக்ரா', வெள்ளை யானை மற்றும் தர்பராஜ் ஃபிலிம்ஸின் ‘ப்ரொடக்‌ஷன் no-1' ஆகிய படங்களின் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், 2020-ஆம் ஆண்டின் மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு கொண்டுள்ள படமான விஜயின் ‘மாஸ்டர்' திரைப்படத்தின் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எடிட்டிங் வேளைகள் இன்று தொடங்குகிறது. முன்னதாக இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அறிவித்ததன்படி, இன்னும் 15 நாள் எடிட்டிங் வேலைகள் மட்டுமே பாக்கி இருப்பதாக கூறியிருந்தார். அப்படியானால், இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து ‘மாஸ்டர்' திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து வெளியீட்டுக்கு முழுமையா தயாராகிவிடும்.

மேலும், இப்படம் எக்காரணம் கொண்டும் OTT தளங்களில் வெளியாகாது, எவ்வளவு நாள் ஆனாலும் திரையரங்குகளிலே வெளியாகி பெரும் வெற்றியைப் பெரும் என திரைப்படத் துறையின் பல தரப்பினரிடமிருந்து தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்று சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்', நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், கும்கி-2, சூர்ப்பணகை, பூமி-2 உட்பட 21 திரைப்படங்களுக்கான வேலைகள் தொடங்கப்படுகிறது. 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com