முகப்புகோலிவுட்

நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் ‘மாஸ்டர்’ நடிகை.?

  | June 26, 2020 23:13 IST
Master Malavika

‘மாஸ்டர்’ படத்தில் ‘தளபதி’ விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளதால் தான், தற்போது இந்த நிலைக்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

மலையாள திரைப்படத் துறையில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய் நடிகை மாளவிகா மோகனன், ரஜினிகாந்தின் ‘பேட்ட' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு முக்கியமான வேடத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் 'மாஸ்டர்' திரைப்படத்தில் ‘தளபதி' விஜய்க்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுவருகிறார்.

இந்நிலையில், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் கோலிவுட்டின் முன்னனி நடிகை நயன்தாராவை விட, மாளவிகாவுக்கு அதிக ஊதியம் கிடைக்கிறது என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

மாளவிகா மோகனன் ஏற்கனவே Beyond the Clouds என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நிலையில், தனது இரண்டாவது இந்தி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தி நடிக்க கையெழுத்திட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஸ்ரீதேவி நடித்த ‘Mom' படத்தை இயக்கிய ரவி உத்யவர் இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் மாளவிகா ஒரு வலுவான அதிரடி வேடத்தில் நடித்து வருவதாகவும், அதற்காக இந்த லாக்லவுன் காலங்களில் சண்டை திறன்களைக் கற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், மிக முக்கியமாக அவர் இந்த படத்தில் நடிப்பதற்காக ரூ. 5 கோடி சம்பளத்தைப் பெறுவார் என்று கூறப்படுகிறது. அது, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சம்பளத்தை விட அதிகமானதாகும். நயன்தாரா தற்போது தனது பிராந்திய படங்களுக்காக ரூ. 4 கோடி பெற்று வருகிறார் என்று கூறப்படுகிறது.

‘மாஸ்டர்' படத்தில் ‘தளபதி' விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளதால் தான் கடந்த சில மாதங்களாக ஊடகங்களின் கவனத்திற்கு வந்து, தற்போது இந்த நிலைக்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com