முகப்புகோலிவுட்

பிறந்தநாள் அதுவுமாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குநர் AL விஜய்.!

  | June 18, 2020 17:25 IST
Al Vijay

ஏ.எல். விஜய் தற்போது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி' என்ற பெயரில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் இயக்கிவருகிறார்.

தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மகனும், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவருமான ஏ.எல். விஜய், அஜித்தின் ‘கிரீடம்', மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், விஜய்யின் ‘தலைவா', தேவி, போன்ற ஹிட் திரைப்படங்களின் மூலம் பெரும் ரசிகர்களைக் கொண்டுள்ளார். இவரும், நடிகை அமலா பாலும் 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து, பின் சில தனிப்பட்ட காரணங்களுக்காக 2017-ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர்.

பின்னர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் விழாவில் ஏ.எல் விஜய், ஆர். ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த மாதம் (மே30) இவர்களுக்கு அழகிய ஆன் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குநர் விஜய், இந்த சிறப்பு தினத்தில் அவரது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தானும், தனது விரலை இருக்கமாக பிடித்திருக்கும் அந்த அழகான பிஞ்சு குழந்தையின் புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவிவருகிறது.

pbt83cn

தொழில் முன்னணியில், ஏ.எல். விஜய் கடைசியாக வாட்ச்மேன், தேவி 2 போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார், அடுத்ததாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி' என்ற பெயரில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் இயக்கிவருகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com