முகப்புகோலிவுட்

விஜயின் வேற லெவல் மாஸ்..! ‘தளபதி64’ ஃபோடோஸ் லீக்...

  | November 19, 2019 11:17 IST
Thalapathy Vijay

துனுக்குகள்

  • தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
  • இப்படத்தில் கேங்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் விஜய் நடிக்கிறார்.
  • இப்படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.
விஜயின்  ‘தளபதி 64' பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட மேலும் சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தளபதி 64' என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஜினியின் ‘பேட்ட' படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த மாலவிகா மோஹணன் நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.

மேலும், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், ஷாந்தனு பாக்கியராஜ், ஆண்டனி வர்கீஸ் மற்றும் ‘96' திரைப்படத்தில் இளைய வயது திரிஷாவாக நடித்த கௌரி ஜி கிஷான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.  ப்ரிட்டோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
முன்னதாக, விஜய் சென்னை விமான நிலையம் சென்ற புகைப்படம், இப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திலிருந்தும் ரசிகர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல், தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து எடுக்கப்பட்ட மேலும் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிவருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்