முகப்புகோலிவுட்

இது புதுசா இருக்கே..! இந்த மேட்டரு உங்களுக்குத் தெரியுமா? தளபதி65 சன் பிக்சர்ஸ் தயாரிக்கவில்லையா..?

  | February 27, 2020 11:30 IST
Thalapathy 65

துனுக்குகள்

  • விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
  • மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
  • இப்படம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகிறது.

‘தளபதி' விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆண்ட்ரியா ஜெரமியா, ஷாந்தனு பாக்கியராஜ், கௌரி ஜி கிஷன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி மாதம் வெளியாகவுள்ளது.

இதற்கிடையில், சன் பிக்சர்ஸ்  நிறுவனம் அதன் அடுத்த தயாரிப்பு மிகப் பெரிய பட்ஜட்டில் தான் இருக்க வேண்டும், அதுவும் மாஸ் ஹீரோவான விஜயுடன் தான் இருக்க வேண்டும் என விஜயின் கால் ஷீட்டை வாங்கிவிட்டது. அதையடுத்து அதற்கு ஏற்ற மாஸ் கதையை எதிர்பார்த்து வெற்றிமாறன், மகிழ் திருமேனி, பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜா, சுதா கொங்கரா எனப் பல இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ளார் விஜய்.
அதில் சில கதைகள் உடனடியாக ஓகே சொல்லும் அளவிற்கு மிகவும் பிடித்திருந்ததாம். கடைசியாகச் சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சுதாவுக்கே படத்தைக் கொடுக்கலாம் என ஒரு வழியாக முடிவுக்கு வந்ததாகக் கூறப்பட்டுவந்தது. அதன் அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இப்போது புதிதாக ஒரு தகவல் வெளியாகி வைரலாகிவருகிறது. அதாவது, மாஸ்டர் படப்பிடிப்பில் லோகேஷ் கனகராஜிடமே மீண்டும் ஒரு கதையை விஜய் கேட்டுள்ளதாகவும், அந்த கதையும் மிகவும் பிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து தற்போது ‘தளபதி 65' திரைப்படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்போது இதில் ஒரு ட்விஸ்ட் என்ன வென்றால், இந்த படத்தை சன் பிக்சர்ஸுக்கு பதிலாக ‘கைதி' படத்தைத் தயாரித்த எஸ்.ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாம். இப்படி பல புதிய தகவல்கள் பறவிவருகிறது. இது போன்ற புதுப்புது தகவல்களைக் கேட்கும் விஜயின் ரசிகர்களுக்கு ‘நமக்கு தளபதி படத்தைப் பற்றி அப்டேட் வந்துக்கிட்டெ இருந்தா போதும், எப்படி இருந்தாலும் அதைக் கொண்டாடத் தான் போறோம்' என்ற மகிழ்ச்சியிலேயே உள்ளனர்.
     விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்