முகப்புகோலிவுட்

கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் விக்ரம் பிரபு..! ‘அசுரகுரு’ 2-வது ட்ரைலர்..!

  | March 11, 2020 16:46 IST
Asuraguru

மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உறுவாகிவரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

விக்ரம் பிரபு மற்றும் மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ‘ராஜகுரு'. இப்படத்தை ராஜ்தீப் இயக்கியுள்ளார். JSB Film Studios பேனரின் கீழ் JSB சதீஷ் தயாரித்துள்ளார். த்ரில்லர் ராபரி கதைக்களத்தில் உருவாக்கியுள்ள இப்படத்துக்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார்.

தற்போது காமெடியில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் யோகி பாபு இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இயக்குநர்-நடிகர் மனோபாலா மற்றும் சுப்பராஜு துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் மார்ச் 13-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இந்த ட்ரைலரை நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படம் கமல் ஹாசனின் ‘குரு' திரைப்படத்தை ஒற்றதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

விக்ரம் பிரபு கடைசியாக மணிரத்னம் தயாரித்த ‘வானம் கொட்டட்டும்' திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதையடுத்து மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உறுவாகிவரும் ‘பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com