முகப்புகோலிவுட்

“கமல் சாரைப் பார்த்துதான் நான் நடிக்க வந்தேன்” விக்ரம் நெகிழ்ச்சி

  | July 04, 2019 12:24 IST
Vikram

துனுக்குகள்

  • ராஜேஷ் எம். செல்வா இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • தூங்காவனம் படத்தை இயக்கிய இயக்குநர் இவர்
  • ஜிப்ரான் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
 ராஜ்கமல் இண்டர்நேஷனல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கும் சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னை நட்சத்திர ஓட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விக்ரம் கமல் பற்றியும் இந்த படம் பற்றிய அனுபவங்களையும் பகிர்ந்துக்கொண்டார்,
 
"ஏற்காட்டுல படிக்கும் போது நிறைய படங்கள் போடுவாங்க. எப்பவாது தமிழ் படம் போடுவாங்க.  அதில் நாங்கள் தேர்ந்தெடுப்பது கமல்சார் படங்களைத் தான். அவரைப் பார்த்து தான் நான் நடிக்க வந்தேன். அவரின் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். எனக்குப் பதினாறு வயதிலே  படத்தை ரிமேக் பண்ணி நடிக்கணும் என்று ஆசை. ஆனால் அது என்னால் முடியாது. கமல் சார், புதிதாக நடிக்க வரும் லட்சக்கணக்கான கலைஞர்களுக்கு இன்ஸ்பிரேசன். இந்தப்படத்தில் அபி இன்னொரு ஹீரோ. அபி அப்படி ஒரு நல்ல பையன். ரொம்ப இண்டர்ஸ்ரிங்கான கேரக்டர் பண்ணிஇருக்கார். நல்லா நடித்திருக்கிறார். அக்‌ஷரா ஹாசன் ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கிறார். படத்தை ரீ ரிங்காடிங்கோட பார்க்கும் போது சூப்பரா இருந்தது. இசை அமைப்பாளர் ஜிப்ரான் அருமையா வொர்க் பண்ணி இருக்கார். படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குநர் ராஜேஷ் சார் இந்தப்படத்தில் இன்னொரு நடிகர். அழகா நடிக்கச் சொல்லித் தருவார். எல்லாரும் நான் துருவ நட்சத்திரம் படத்தில் ஸ்டைலிஷாக இருப்பேன் என்று நினைக்கிறார்கள்.ஆனால் இநத்ப்படத்தில் ரொம்ப ஸ்டைலாக இருப்பேன். இந்தப்படம் நிச்சயம் எனக்குப் புதிய ரசிகர்களைக் கொண்டு வரும் என்று நம்புகிறேன்" என்றார்
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்