முகப்புகோலிவுட்

“பொருப்பு இல்லாத கேவலமான சமூகம்” கோபத்தில் பிரபல இசையமைப்பாளர்..!

  | March 24, 2020 10:18 IST
Corona

“உங்களை நினைத்து பெருமையாக உள்ளது சார்” என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றை வெவ்வேறு வழிகளில் எதிர்த்துப் போராடுகிறது, இதற்கு முன்னர் கேள்விப்படாத இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளைப் பின்பற்றுகின்றன. ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் முன்மொழியப்பட்ட மக்கள் ஊரடங்கு #JanataCurfew ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது, பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள் தங்கியிருந்தனர். கொடிய வைரஸை கட்டுக்குள் கொண்டுவருவதில் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்பவர்களுக்கு ஆதரவை வழங்குவதற்காக மாலை 5 மணிக்கு மக்கள் தங்கள் வீடுகளிலிருந்தே சன்னல் மற்றும் பால்கனியிலிருந்து கைதட்டி பாராட்டுமாறு பிரதமர் பரிந்துரைத்திருந்தார். இருப்பினும், நாட்டின் பல இடங்களில், மக்கள் சாலைகளில் வெளியே வந்து, நடனமாடி, குழுக்களாகக் கூடி, வைரஸ் முற்றிலுமாக அழிக்கப்பட்டதைப் போலக் கொண்டாடினர்.

இதுபோன்ற பல வீடியோக்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் சமூக ஊடகங்களில் பதிவாகிக் கொண்டிருந்தன. அதனைப் பார்த்த பல பிரபலங்கள் தங்கள் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினர்.

அதையடுத்து இசையமைப்பாளர் சாம் சி.எஸ் மக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதைப் பார்த்து வேதனையடைந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், “எல்லாத்தயும் இழுத்து மூடுங்க”, “சொன்னா கேக்குற மாதிரி தெரியல” மற்றும் “உங்களை நினைத்து பெருமையாம உள்ளது சார்” என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

இளம் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் விக்ரம் வேதா, கைதி உட்பட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் ராக்கெட்ரி : நம்பி விளைவு, சூர்ப்பனகை, ராஜவம்சம், கசட தபற, யாருக்கும் அஞ்சேல், எண்ணி துணிக, பெல்பாட்டம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்