முகப்புகோலிவுட்

சாண்டி வீட்டிற்கு சென்ற அபிராமி! வைரலாகும் புகைப்படம்!

  | August 22, 2019 19:01 IST
Bigg Boss

துனுக்குகள்

 • பிக்பாஸ் வீட்டில் இருந்த வெளியேறிய அபிராமி வைத்யநாதனை சந்தித்தார்
 • இன்று சாண்டி வீட்டிற்கு சென்றுள்ளார் அமிராமி
 • சாண்டி இந்த வாரம் நாமினேஷனில் இருக்கிறார்
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிராமி பிக்பாஸ் வீட்டில் தனக்கு பிடித்த போட்டியாளர்களின் குடும்பத்தை சந்தித்து வருகிறார். அதன்படி மோகன் வைத்யாவை முதல் ஆளாக சந்தித்த அபிராமி, அவரது நெருங்கிய தோழி சாக்‌ஷி அகர்வாலையும் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து தான் நடித்து வெளியாகி இருந்த நேர்கொண்ட பார்வை படத்தையும் பார்த்து ரசித்தார்.
 
தற்போது பிக்பாஸ வீட்டில் போட்டியாளராக இருந்து வரும் நடன இயக்குநர் சான்டி மாஸ்டரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்த அபிராமி, அதற்கான புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முன்னதாக நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட நடிகர் சரவணனும் சாண்டி குடும்பத்தை நேரில் சென்று சந்தித்தார். இந்நிலையில் நடன இயக்குநர் சாண்டி இந்த வார நாமினேஷனில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com