முகப்புகோலிவுட்

“கோமாளி” படத்தில் தணிக்கை குழுவால் நீக்கப்பட்ட விவகாரமான காட்சிகள்! ரைலாகும் வீடியோ!

  | September 13, 2019 14:26 IST
Comali

துனுக்குகள்

  • விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படம் இது
  • இப்படத்தில் முதல் முறையாக ஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால் நடித்தார்
  • இப்படத்திற்கு ரஜீனி ரசிகர்களிடையே எதிர்ப்பு இருந்தது
கோமாளி படத்தில் தணிக்கை குழுவால் நீக்கப்பட்ட சர்ச்சைக்குறிய காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.
 
ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘கோமாளி'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்திருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் வாரி குவித்தது.
 
இப்படத்தின் டிரெய்லர் வெளியானபோது நடிகர் ரஜினியை விமர்சிக்கும் சில காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தன. அப்போது ரஜினி ரசிகர்களிடமிருந்து இப்படத்திற்கு வலுவான எதிர்ப்பு எழுந்தது. இதனை அடுத்து படக்குழு அந்த காட்சிகளை நீக்கிவிட்டோம் என்று அதிகாரப்பூர்வமாக நீக்கியது.

தணிக்கை குழுவிற்கு சென்ற இப்படம் அங்கேயும் பல காட்சிகளுக்கு சென்சார் கட் வாங்கி இருக்கிறது. படம் திரைக்கு வரும் போது சில வசனங்கள் மியூட் செய்யப்பட்டும் இருந்தது. தற்போது இந்த படத்தில் சென்சார் கட் செய்யப்பட்ட காட்சிகள், செய்யப்படாத காட்சிகள் என முன் பின் என கோர்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது படக்குழு இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. முக்கியக்குறிப்பு தணிக்கை குழுவால் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டிருக்கும் படக்குழு நடிகர் ரஜினியின் வீடியோவை விமர்சிக்கும் காட்சியை மட்டும் இதிலிருந்தும் கட் செய்திருக்கிறது படக்குழு.
 

தற்போது வெளியாகி இருக்கும் இந்த காட்சிகளில், சிம்புவுக்கு எதிராக மாதர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தை சித்தரிக்கும் விதமாகவும், நடிகர் தணுஷ் தன்னுடைய மகன் என்று மதுரை தம்பதியினர் வழக்காடு மன்றத்திற்கு வந்த காட்சி சித்தரிப்பும், ஜெயலலிதாவின் மகள் என்று கூறிய அரசியல் நிகழ்வையும் சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்