முகப்புகோலிவுட்

"அயோக்யா" திரைப்படம் தள்ளிவைப்பு; விஷால் ஆதங்கம்?

  | May 10, 2019 11:53 IST
Ayogya

துனுக்குகள்

  • வெங்கட் மோகன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • விஷால் ராஷி கண்ணா இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்
  • இன்று இத்திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது
வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் படம் அயோக்யா. இந்த படத்தில் விஷால் - ராக்ஷி கண்ணா நடித்திருந்தனர். இந்த படம் இன்று திரைக்கு வர இருந்த நிலையில், திடீரென படம் ரிலீஸ் ஆகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
 
இப்படத்தின் தயாரிப்பாளர் மது தாக்கூரின் பழைய திரைப்படங்கள் வெளியீட்டில் 3 கோடி ரூபாய் தர வேண்டும் என்றும் அதை கொடுத்தால்தான் அயோக்யோ திரைப்படம் ரிலீஸ் செய்ய அனுமதிக்க முடியும் என்று தென்னிந்திய திரைப்பட சபை சார்பில் கூறியுள்ளதால் படம் வெளியாகவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் விஷால் கொந்தளித்து ட்வீட் போட்டுள்ளார். அதில்,
"இதற்கிடையில், ஒரு நடிகனாக என்னோட வேலையை நான் சிறப்பாக செய்துள்ளேன். அயோக்யா படம் வெளியாவதற்கு நான் காத்திருக்கிறேன். ஒரு நடிகனையும் தாண்டி பல்வேறு துறைகளில் முத்திரை பதித்துள்ளேன். சிறு வயதிலிருந்தே நான் இப்படித்தான். கஜினி முகமதுவை குறிப்பிட்டு இது போதாதா? என்று கூறியுள்ளார். என்னோட நேரம் வரும். அதுவரையில், என்னோட பணியை தொடர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்"
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்