முகப்புகோலிவுட்

விஷால்- அனிஷா திருமணம் தடையா? தீயாய் பரவும் செய்தி என்ன?

  | August 23, 2019 13:36 IST
Vishal

துனுக்குகள்

 • தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் அனிஷா
 • விஷால் நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது
 • தற்போது இவர்களது திருமணம் தடைபட்டதாக செய்திகள் வெளியாகிறது
நீண்ட நாட்களாக பல்வேறு வதந்திகளை ஏற்படுத்தி வந்த விஷாலின் திருமணம் குறித்தான செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது.  நடிகர் விஷால் ஆந்திர தொழிலதிபரின் மகளும் நடிகையுமான அனிஷாவை காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வதாகவும் விஷால் அறிவித்திருந்தார்.
 
கடந்த மார்ச் மாதம் இருவீட்டாரின் முன்னிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை அடுத்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விஷாலுடன் இருந்த அனைத்து போட்டோக்களையும் நீக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்து விஷால் மற்றும் அனிஷா தரப்பு இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலையும் சொல்லவில்லை. இந்நிலையில் இதை ஒரு காரணமாகக் கொண்டு சமூகவலைத்தளங்களில் திருமணம் நின்று விட்டதாக வதந்திகள் வேகமாக பரவி வருகிறது. இந்த வதந்திக்கு இரு தரப்பினரும் விரைவில் முற்றுபுள்ள வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com