முகப்புகோலிவுட்

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு நடிகர் விஷால் மனு!

  | June 17, 2019 17:01 IST (Andorra)
Nadigar Sangam Elections

துனுக்குகள்

  • நடிகர் சங்க தேர்தல் வரும் ஜுன் 23ல் நடக்கிறது
  • நாசரை எதிர்த்து கே. பாக்கியராஜ் போட்டியிடுகிறார்
  • விஷாலை எதிர்த்த ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார்
நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்ககோரி சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிடக்கோரி நடிகர் விஷால் மனு.
 
நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து நடிகர்சங்க பொதுத் தேர்தல் வரும் 23ல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நாசர் தலையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன.
 
இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பாண்டவர் அணி,
“வெறும் காலி இடமாக இருந்த இடத்தில் இன்று கட்டிடம் இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் நாங்கள் சொன்ன எல்லாவற்யும் செய்து விட்டோம். ஒன்றைத் தவிற என்றனர்”
 
இதனைத் தொடர்ந்து நடக்கவிருக்கும் தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை காவல் ஆனையருக்கு உத்தரவிட வேண்டும் என்று நடிகர் விஷால் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாணைக்கு வருகிறது.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்