முகப்புகோலிவுட்

“காந்தி தேசம், காந்தி ஜெயந்தியில் பொண்ணுக்கு கொடுமையா” அயோக்கியா ட்ரெய்லர்

  | April 19, 2019 17:57 IST
Vishal

துனுக்குகள்

  • இப்படதை வெங்கட் மோகன் இயக்கி இருக்கிறார்
  • இப்படத்திற்கு சாம். சி.எஸ் இசை அமைத்திருக்கிறார்
  • இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், பார்த்தீபன், கே.எஸ். ரவிக்குமார், ராஷிகண்ணா, பூஜா தேவரய்யா, யோகி பாபு இன்னும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “அயோக்கியா”.
 
சாம் சி.எஸ் இசையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டு சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் விஷால் அடாவடியான காவல்துறை அதிகாரியாக அனைவரையும் மிரட்டுகிறார்.
 
ட்ரெய்லர் முழுவதும் விஷால்தான் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. 
 

 
ட்ரெய்லர் தொடங்கும் போதே “ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான்” பின்னணியில் பாடல் ஒளிக்க வெள்ளை சட்டை அணிந்து மாஸ் எண்ட்ரி கொடுகிறார் விஷால். அதன் பிறகு அடிதடி, லஞ்சம் பெறுவது, கிண்டல் செய்வது போல் காட்சிகள் இடம் பெறுகிறது.
 
“காந்தி தேசத்தில் காந்தி ஜெயந்தியில் உன் பொண்ணுக்கு இப்படி நடந்துடிச்சே”, “ ஒரு பொண்ணு பாத்ததுமே தூக்கிட்டு போயி ரேப் பண்ணக்கூடிய தைரியம் எங்களுக்கு இருக்கு, இப்பவே எங்களுக்கு தண்டன கொடுக்க முடியுமா” என்கிற வசனங்கள் இடம் பெறுவதை பார்க்கும் பாது சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கம் வன்முறைகளை பற்றி பேசும் படமாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
சாம் சி.எஸ் இசையில் காட்சிக்கு காட்சி அமர்களப்படுத்தியிருக்கிறார். சிறந்த ஒளிப்பதிவு படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்