முகப்புகோலிவுட்

கங்கனாவை பகத் சிங்கிற்கு இணையாக பாராட்டிய விஷால்.!

  | September 10, 2020 20:53 IST
Vishal

விஷாலின் இந்த பதிவிற்கு சமூக வலைதளங்களில் கருத்துக்கள் குவிந்துவருகின்றன.

நேற்று, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மும்பையில் உள்ள அவரது அலுவலகம் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாகக் கூறி இடிக்கப்பட்டதால், ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டார். மேலும், பி.எம்.சி (Brihanmumbai Municipal Corporation) எடுத்த இந்த அதிர்ச்சியான நடவடிக்கை அவருக்கும் மகாராஷ்டிரா அரசுக்கும் இடையிலான மோதல் காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கங்கனா ரனாவத் மும்பையை பாக்கிஸ்தான் அக்கிரமிப்பு காஷ்மீர் என்று கூறியுள்ளார், மேலும் அவருக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முறியடிப்பதாக உறுதியளித்துள்ளார். பி.எம்.சியின்  இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது என்று பல பிரபலங்கள் கங்கனாவை ஆதரித்தனர். இப்போது கோலிவுட்டிலும் நடிகர் விஷால் கங்கனாவுக்கு ஆதரவளித்து ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார்.

விஷால் தனது குறிப்பில் “அன்புள்ள கங்கனா, உங்கள் தைரியத்திற்கு வணக்கம், எது சரி, எது தவறு என்று குரல் கொடுக்க நீங்கள் ஒருபோதும் இருமுறை யோசித்ததில்லை. இது உங்கள் தனிப்பட்ட பிரச்சினை அல்ல, ஆனால் அப்போதும் கூட அரசாங்கத்தின் கோபத்தை எதிர்கொண்டீர்கள், நீங்கள் நிலையாக இருந்தீர்கள், இது ஒரு மிகப் பெரிய முன்மாதிரியாக அமைகிறது. இது 1920களில் பகத் சிங் செய்ததைப் போன்றது.

ஏதேனும் சரியாக இல்லாதபோது அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் பேசுவதற்கு இது ஒரு முன்மாதிரியாக இருக்கும். மேலும் ஒரு பிரபலமாக மட்டும் இல்லாமல் ஒரு சாதாரண மனிதராகவும் இருக்க வேண்டும். பேச்சு சுதந்திரம் (Article 19). உங்களுக்கு பெருமை சேரட்டும், நான் உங்களுக்கு தலை வணங்குகிறேன், குட் பை” என்று பதிவிட்டுள்ளார்.

விஷாலின் இந்த பதிவிற்கு சமூக வலைதளங்களில் கருத்துக்கள் குவிந்துவருகின்றன.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com