முகப்புகோலிவுட்

"கையில் எடுத்த எந்த விஷயத்தையும் பாதியில் விடமாட்டேன்" விஷால் உறுதி...!

  | May 10, 2019 16:08 IST
Vishal

துனுக்குகள்

  • அயோக்யா படத்தை வெங்கட் மோகன் இயக்கி இருக்கிறார்
  • விஷால் ராஷி கண்ணா இப்படத்தில் நடித்துள்ளனர்
  • துப்பறிவாளன் 2 படத்தில் இவர் நடிக்க விருக்கிறார்
விஷால் நடிப்பில் உருவான அயோக்யா இன்று ரிலீசாக இருந்தது. சில பைனான்ஸ் சிக்கல்களால் தள்ளிப்போனது. இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,
"முதன்முறையாக ஒரு ரீமேக் படத்தில் நடித்துள்ளேன். படங்களை ரீமேக் செய்யும்போது அந்தந்த மொழியின் மார்க்கெட்டில் சிக்கல் ஏற்படும்.

இதனாலேயே நான் ரீமேக் செய்வதை தவிர்த்து விடுவேன். ஆனால் அயோக்யா படத்தின் கதை என்னை பாதித்ததால் ரீமேக் செய்துள்ளேன். பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்பதை படம் பேசுகிறது. இப்போது இருக்கும் தண்டனைகள் போதாது என்பது என் கருத்து. என்றவர் அனிஷாவுடனான திருமணம் எப்போது என்ற கேள்விக்கு "அக்டோபர் 9-ந் தேதி திருமணம், இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை" என்றார்.
 
மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் துப்பறிவாளன் 2 உறுதியாகிவிட்டதா என்றதற்கு
"ஆமாம். ஆகஸ்டு 15-ந் தேதி படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம்"
தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை தமிழக அரசு கையில் எடுத்தது பற்றி கேட்கப்பட்ட போது,

"தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தில் அரசு காட்டும் அக்கறையையும் ஆர்வத்தையும் பைரசி வி‌ஷயத்திலும் காட்டும் என நம்புகிறேன். காரணம் பைரசி தான் தமிழ் சினிமாவை அழித்துக்கொண்டு இருக்கிறது". என்றவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது பற்றி  கூறும் போது,
 
"மீண்டும் போட்டியிடுவேனா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் கையில் எடுத்த எந்த வி‌ஷயத்தையும் பாதியில் விடமாட்டேன்". என்றார்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்