முகப்புகோலிவுட்

விஷாலின் “அயோக்யா” திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு…?

  | May 07, 2019 19:14 IST
Vishal

துனுக்குகள்

  • வெங்கட் மோகன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • மே 10ல் இப்படம் வெளியாகிறது
  • இப்படத்திற்கு யூ,ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது தணிக்கைக்குழு
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், காஜல் அகர்வால் நடித்து 2015 - ல் வெளிவந்த TEMPER என்ற திரைப்படம், தமிழில் அயோக்யா என்ற பெயரில் தயாராகி உள்ளது.
 
இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.
 
இவர்களுடன்  சோனியா அகர்வால், தேவ தர்ஷினி , பார்த்திபன், கே. எஸ். ரவிக்குமார் உள்ளிட் டோர் நடித்துள்ளனர். விஷாலின் அயோக்யா திரைப்படம் வருகிற 10 - ம் தேதி, திரைக்கு வருகிறது. என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் இப்படத்தை பார்த்த தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது.
 
இந்த படத்தின் பாடல்கள் எற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  கோடை விடுமுறையை முன்னிட்டு இப்படம் இந்த மாதம் வெளியிடுகிறது படக்குழு.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்