முகப்புகோலிவுட்

விஷால் நடிப்பில், யுவன் இசையில் 'சக்ரா' - விரைவில் OTT தளத்தில் வெளியீடு..?

  | September 17, 2020 10:52 IST
Vishal's Chakra

துனுக்குகள்

 • எம்.எஸ் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் தான் 'சக்ரா'.
 • சைபர் கிரைம் கதைக்களத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள இப்படத்தின்
 • சக்ரா திரைப்படமும் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி
எம்.எஸ் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் தான் 'சக்ரா'. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக வெகு நாட்கள் கழித்து மீண்டும் புன்னகை அரசி கே.ஆர். விஜயா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக நடிக்கும் விஷாலே தனது 'விஷால் பிலிம் பேக்டரி' மூலம் இந்த படத்தைத் தயாரித்து வருகிறார்.

சைபர் கிரைம் கதைக்களத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலரை அண்மையில் தமிழில் நடிகர் கார்த்தி மற்றும் ஆர்யா, தெலுங்கில் ராணா டகுபதி, மலையாளத்தில் மோகன்லால் மற்றும் கன்னடத்தில் யாஷ் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டனர். நான்கு மொழிகளிலும் இந்த ட்ரைலர் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இந்நிலையில் தற்போது உலக அளவில் கொரோனா காரணமாக பூட்டுதல் நிலவி வருகின்றது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பல பொருளாதார நிலையங்கள் துவங்கப்பட்டுவிட்ட நிலையில், திரையரங்குகள் தொடர்ந்து பூட்டுதலில் உள்ளது. இதனால் படங்கள் OTT தளத்தில் வெளியாகி வரும் நிலையில் விஷாலின் சக்ரா திரைப்படமும் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் படக்குழு இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com