முகப்புகோலிவுட்

ஒவ்வொரு வாரமும் குவியும் தமிழ் படங்களுக்கு ஏன் இந்த விதிகள் இல்லை- விஷால் ஆதங்கம்

  | April 26, 2019 15:08 IST
Vishal

துனுக்குகள்

 • அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இன்று வெளியானது
 • விஷால் நடிகர் சங்கச் செயலாளராக இருந்து வருகிறார்
 • தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பதிவு வகிக்கிறார்
ஹாலிவுட் சினிமாவான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  தமிழ் நாட்டை பொருத்தவரை டிக்கெட் முன்பதிவில் பாகுபலி, 2.0 ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது படமாக எண்ட் கேம் திரைப்படம் இடம் பெற்றுள்ளது.
 
இன்று காலை அதிகாலை நான்கு மணிக்கே இப்படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.
 
இந்த படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள் பல இருப்பதால் திரையரங்குகளில் இருந்து யாரும் வீடியோ எடுத்து பரப்பிவிடக்கூடாது என்று வெற்றி திரையரங்கு உரிமையாளர் ராகேஷ் தெரிவித்துள்ளார். செல் போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு படத்தை ரசியுங்கள் என்று அவர் கூறியிருந்தார்.
 
இப்பதிவிக்கு பதில் அளிக்கும் விதமாக நடிகர் சங்கச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஆண்டுக்கு ஒரு முறை வரும் ஆங்கில படத்துக்கு இருக்கும் இத்தகைய அறிவிப்பு வாராவாரம் வரும் தமிழ் படங்களுக்கும் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
 
அதற்கு பதில்அளிக்கும் விதமாக “ சினிமாவுக்கு எப்போதும் துணையாக இருப்போம். பைரசியை ஊக்குவிப்பதில்லை. எங்களுக்கு மொழி ஒரு தடையில்லை” என்று கூறியிருக்கிறார் ராக்கேஷ்.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com