முகப்புகோலிவுட்

நடிகர் சங்கத்தேர்தல்;முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஷால்

  | June 04, 2019 19:47 IST
Vishal

துனுக்குகள்

  • வரும் 23 தேர்தல் நடைபெறுகிறது
  • விஷால் மீண்டும் பொதுச்செயலாளராக போட்டியிடுகிறார்
  • நாசர் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக்காலம் சமீபத்தில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தென் இந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
 
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019-2022 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
 
 இதனை முன்னிட்டு உறுப்பினர்களுக்கு வாக்களிக்க வசதியாக அன்றைய தினம் படப்பிடிப்புகள் ரத்து செய்து விடுமுறை அளிக்குமாறு நடிகர் சங்கம் சார்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் மற்றும் தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களுக்கும் நடிகர் சங்கம் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்