முகப்புகோலிவுட்

தனி அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிற்கு விஷால் தரப்பு அதிரடி நடவடிக்கை...?

  | May 10, 2019 12:57 IST
Vishal

துனுக்குகள்

  • விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்தார்
  • தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்தது அரசு
  • விஷா தரப்பினர் தனி அதிகாரி நியமித்ததை கண்டித்து நீதிமன்றம் சென்றனர்
தயாரிப்பாளர் சங்கத்தில் எழுந்த முறைகேடு புகார்கள் மற்றும் வழக்குகள் காரணமாக அதன் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றுக் கொண்டது. இதையடுத்து என்.சேகர் என்ற தனி அதிகாரியை தயாரிப்பாளர் சங்கத்துக்கு நியமித்தது தமிழக அரசு. இனிமேல் சங்கத்தின் செயல்பாடுகள் அனைத்துமே இவரின் மேற்பார்வையில் தான் நடைபெறும் என்றும் அறிவித்தது. இதனை எதிர்த்து நடிகர் விஷால் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
 
இந்நிலையில் இதைத்தொடர்ந்து தனி அதிகாரி என்.சேகர், சங்கத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்தும் வகையில், தனக்கு உதவுவதற்காக இயக்குநர் பாரதிராஜா, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.வி.சேகர் உள்பட 9 பேர் அடங்கிய குழுவை நியமித்துள்ளார். இதனை எதிர்த்து நீதிபதி வைத்தியநாதன் முன்பு தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் தரப்பில் முறையிடப்பட்டது.
 
ஏற்கெனவே தனி அதிகாரி என்.சேகர் நியமனத்தை எதிர்த்து விஷால் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்காலிக குழுவை நியமிக்க தனி அதிகாரிக்கு அதிகாரமில்லை என கதிரேசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்