முகப்புகோலிவுட்

விஷாலின் அடுத்த படத்தின் டைட்டில், ஃபிர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!

  | November 15, 2019 10:10 IST
Chakra

துனுக்குகள்

  • விஷாலின் அடுத்த படத்தின் தலைப்பு வெளியானது.
  • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கௌதம் மேனன் வெளியிட்டார்
  • விஷாலின் ‘ஆக்‌ஷன்’ திரைப்படம் இன்று வெளியானது.
நடிகர் விஷாலின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபிர்ஸ்ட் லுக் போஸ்டரை கௌதம் வாசுதேவ் மேனன் இன்று வெளியிட்டார்.

விஷாலின் ‘ஆக்‌ஷன்' திரைப்படம் இன்று வெளியாகிறது. இப்படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். இதில் தமன்னா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், விஷாலின் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

எம்.எஸ். ஆனந்தன் இயக்கும் இப்படத்துக்கு ‘சக்ரா' என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷாலுடன் ரெஜினா கசாண்ட்ரா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷ்ருதி டாங்கே, மனோபாலா மற்றும் ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்ப்டத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இன்று இணையத்த்தில் வெளியிட்டுள்ளார். வெளியான இந்த போஸ்டரின் மூலம் இப்படம் சரியான ஆக்‌ஷன் திரைப்படம் என்றும் தெரிகிறது. இப்படத்துக்கு இடையில் விஷால், மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன் 2' படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்