முகப்புகோலிவுட்

நடு ராத்திரியில் ஜ்வாலா குட்டாவுடன் புதிய வாழ்க்கையை தொடங்கிய விஷ்ணு.!

  | September 07, 2020 20:44 IST
Jwala Gutta Engaged With Vishnu Vishal

பணி முன்னணியில், விஷ்ணு விஷால் ‘எஃப்.ஐ.ஆர்’, ஜகஜால கில்லாடி, மோகன் தாஸ் ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

நடிகர் விஷ்ணு விஷால் சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . ‘நீர்பறவை', ‘முண்டாசுப்பட்டி',  ‘ஜீவா',  ‘இன்று நேற்று நாளை', ‘ராட்ச்சசன்' ஆகிய படங்களில் நடித்ததற்காக விஷ்ணு பிரபலமான நடிகராக வலம் வருகிறார். கடைசியாக அவர் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தில் நடித்திருந்தார்.

கருத்து வேறுபாடுகள் காரணமாக விஷ்ணு விஷால் கடந்த 2018-ஆம் ஆண்டில் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றார். அதையடுத்து பிரபல பூப்பந்து வீரர் ஜ்வாலா குட்டாவை அவர் காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. விஷ்ணு விஷால் மற்றும் வாலா குட்டா இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுவந்தது. அது குறித்த அவர்கள் இருவரிடமிருந்தும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவராமமே இருந்தது. ஆனால், இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் அதிகமாக சமூக வலைதளங்களில் வெளியாகிக்கொண்டே இருந்தன.

விரைவில் இவர்களுக்கைடையிலான உறவை அதிகாரப்பூர்வமாக விஷ்ணு மற்றும் ஜ்வாலா தரப்பிலிருந்து வெளியிடப்படும் என்றும், விரைவில் திருமனம் குறித்த அறிவிப்பையும் கொடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது அதற்கான சரியான நேரம வந்துவிட்டது.

ஜ்வாலா குட்டா இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், விஷ்ணு தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததுடன், தங்களது இருவருக்குமான புதிய வாழ்க்கை தொடக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

அவர் தனது பதிவில் “வாழ்க்கையின் புதிய தொடக்கம்.. நேர்மறையாக இருப்போம், எங்களுக்கும், ஆரியனுக்கும், எங்கள் குடும்பங்களுக்கும், நண்பர்களுக்கும், சுற்றியுள்ள மக்களுக்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கி செயல்படுவோம் .. உங்கள் எல்லா அன்பும் ஆசீர்வாதம் தேவை தோழர்களே..”

பணி முன்னணியில், விஷ்ணு விஷால் ‘காடன்' பட வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். மேலும் ‘எஃப்.ஐ.ஆர்', ஜகஜால கில்லாடி, மோகன் தாஸ் ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com