முகப்புகோலிவுட்

“இன்று நேற்று நாளை” பாகம் 2; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்!

  | July 03, 2019 12:51 IST
Indru Netru Naalai 2

துனுக்குகள்

 • ரவிக்குமார் இப்படத்தை இயக்குகிறார்
 • ஜிப்ரான் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
 • சி.வி.குமார் இப்படத்தை தயாரிக்கிறார்
 கடந்த 2015ம் ஆண்டு இயக்குநர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘இன்று நேற்று நாளை'. விஷ்ணு விஷால், மியா, கருணாகரன், டி.எம். கார்த்திக், பி.ரவிசங்கர் இன்னும் பலர் நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஹிப்பாப் தமிழா இசை அமைத்த இந்த படத்தை சி.வி.குமார் தயாரித்திருந்தார்.
 
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவிருப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பில் விஷ்ணு விஷால், கருணாகரன் இருவரும் முந்தைய பாகத்தில் இருந்தது போலவே இணைந்துள்ளனர். இயக்குர் ரவிக்குமார் இயக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்க தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணியை கவனிக்கிறார் என்றிருந்தது.
 
மேலும் இப்படத்தில் இணையும் நடிகை, நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com