முகப்புகோலிவுட்

“குழந்தையாக மாற வேண்டும்” பழைய புகைப்படத்தை வெளியிட்ட விஷ்ணு விஷால்!!

  | May 22, 2020 15:04 IST
Vishnu Vishal

விஷ்ணு அடுத்ததாக ‘மோகன்தாஸ்' திரைப்படத்தில் நடிக்கிறார்.

நடிகர் விஷ்ணு விஷால் சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ‘நீர்பறவை', ‘முண்டாசுப்பட்டி',  ‘ஜீவா',  ‘இன்று நேற்று நாளை', ‘ராட்ச்சசன்' ஆகிய படங்களில் நடித்ததற்காக விஷ்ணு பிரபலமான நடிகராக வலம் வருகிறார். கடைசியாக அவர்  ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தில் நடித்திருந்தார்.

பூட்டுதல் நாட்களில், விஷ்ணு சமூக ஊடக பக்கங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில், தனது வொர்க்அவுட் வீடியோ, த்ரோபேக் உகைப்படங்கள், தனது மகனுடனான பாசம், காதல், தொழில்முறையில் உள்ள அப்டேட் என பலவற்றை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று பழைய அழகான நினைவுகளை மீட்டெடுத்துள்ளார். அதாவது, அவர் தனது தாய், தந்தை, சகோதரியுடன் தனது குழந்தைப் பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் “வாழ்க்கை… மீண்டும் குழந்தையாக மாற நினைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு, ரசிகர்கள் பலரும் ‘இன்று நேற்று நாளை' படத்தில் காண்பிக்கப்பட்ட கால பயணம் செய்யும் இயந்திரத்தை பயன்படுத்தி, மீண்டும் குழந்தை பருவத்துக்கு சென்றுவிடுங்கள் என்று கூறிவருகிறனர். இந்த புகைப்படம் தற்போது செம வைரலாகி வருகிறது.

தொழிலைப் பொருத்தவரை, விஷ்ணு அடுத்ததாக ‘மோகன்தாஸ்' திரைப்படத்தில் நடிக்கிறார். முரளி கார்த்திக் இயக்கத்தில் ‘டார்க் த்ரில்லர்' கதையாக உருவாகவுள்ள இப்படத்தின் டைட்டில் டீஸர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்கு கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்க, விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com