முகப்புகோலிவுட்

‘Go Corona’ வைரலாகும் விஷ்ணு விஷால் பகிர்ந்த ‘முண்டாசுப்பட்டி’ மீம்..!

  | April 06, 2020 23:37 IST
Vishnu Vishal

விஷ்ணு விஷால் தற்போது எஃப்.ஐ.ஆர் படத்தில் நடித்துவருகிறார்.

பிரதமர் மோடியின் இரவு 9 மணி 9 நிமிட முயற்சிக்கு ஆதரவாக நேற்று முழு நாடும் ஒன்று சேர்ந்தது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ஒற்றுமையைக் காட்ட நாடு முழுவதும்

மக்கள் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றினர். பலர் விளக்குகளை ஏற்றியபோது, ஒரு சிலர் மக்கள் பட்டாசுகளை வெடித்து கொரோனா வைரஸ் பூட்டுதலை மீறினர்.

முன்னதாக, மருத்துவ பணியாளர்களையும் துப்புரவு பணியாளர்களையும் உற்சாகப்படுத்தும் விதமாக இரு வாரங்களுக்கு முன்பு நாட்டுமக்கள் எல்லோரையும் வீட்டிலிருந்தபடியே கைத்தட்டி பாராட்டுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். அப்போதும் சில மக்கள் இந்த செயலின் காரணத்தைப் புரிந்துகொள்ளாமல் கூட்டம் கூட்டமாக வெளியே வந்து இசைத்து நடனமாடினர். 
அதேபோல், ‘கோ கொரோனா, கோ கொரோனா' என வைரஸுக்கு எதிராக கோஷம் போடும் மக்களும் இந்த நாட்டில் உள்ளனர். இதுபோன்று நாட்டின் பல மக்களிடையே கொரோனா குறித்த போதிய விழிப்புணர்வு இலாமல் இருக்கிறது.

இதுபோன்ற மூடத்தனமான காட்சிகள் விஷ்ணு விஷால் நடித்த ‘முண்டாசுப்பட்டி' படத்திலும் இடம் பெற்றது. அதனை ஒப்பிட்டு தற்போதைய மக்களின் நிலையில் வெளிப்படுத்தும் ஒரு மீம்ஸ் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஷ்ணு. அதில் “இந்தியா முழுவதும் தற்போது முண்டாசுப்பட்டி காலம் தான், கமண்ட்ஸ் ப்ளீஸ்” எனப் பதிவிட்டுள்ளார். இந்த மீம்ஸ் தற்போது செம வைரலாகிவருகிறது. அந்த மீம்ஸை நீங்களே பாருங்க.

விஷ்ணு விஷால் தற்போது எஃப்.ஐ.ஆர் படத்தில் நடித்துவருகிறார். இதில் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடிக்க, பிக் பாஸ் புகழ் ரைசா வில்சன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com