முகப்புகோலிவுட்

பிரபல விளையாட்டு வீராங்கனையை திருமணம் செய்யும் விஷ்ணு விஷால்..!

  | April 01, 2020 15:06 IST
Vishnu Vishal

ஜ்வாலா குட்டா பிரபல பூப்பந்து விளையாட்டு வீராங்கனையாவார்.

நடிகர் விஷ்ணு விஷால் சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . ‘நீர்பறவை', ‘முண்டாசுப்பட்டி',  ‘ஜீவா',  ‘இன்று நேற்று நாளை', ‘ராட்ச்சசன்' ஆகிய படங்களில் நடித்ததற்காக விஷ்ணு பிரபலமான நடிகராக வலம் வருகிறார். கடைசியாக அவர்  ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தில் நடித்திருந்தார்.

கருத்து வேறுபாடுகள் காரணமாக விஷ்ணு விஷால் கடந்த 2018-ஆம் ஆண்டில் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றார். அதையடுத்து பிரபல பூப்பந்து வீரர் ஜ்வாலா குட்டாவை அவர் காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், தற்போதைய தகவல்களின்படி, விஷ்ணு விஷால் மற்றும் வாலா குட்டா இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஷ்ணு மற்றும் ஜ்வாலா தரப்பிலிருந்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘எஃப்.ஐ.ஆர்' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவர, தற்போது கொரோனாவால் நாடு தழுவிய பூட்டுதலால் படத்திற்கான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் எனத் தெரிகிறது.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com