முகப்புகோலிவுட்

மூன்று நாயகிகளோடு களம் இறங்கும் விஷ்ணு விஷால்!

  | September 03, 2019 15:00 IST
Vishnu Vishal

துனுக்குகள்

  • மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடிக்கின்றனர்
  • அஷ்வந்த் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
  • அருள் வின்செண்ட் ஒளிப்பதிவை கவனிக்கிறார்
ககைளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். குறிப்பாக கிரிகெட் போன்ற விளையாட்டு போட்டிகளை மையப்படுத்திய கதைகளம் என்றால் அதில் கூடுதல் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
 
இவர் அடுத்ததாக நடிக்கும் படம் எப்.ஐ.ஆர். அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.
 
சுஜாதா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அஷ்வந்த் இசையமைக்கிறார். அருள் வின்செண்ட் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ஏற்கனவே விஷ்ணு விஷால், காடன், இன்று நேற்று நாளை 2 மற்றும் பெயரிடப்படாத 2 படங்கள் என அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பூஜை நேற்று தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்