முகப்புகோலிவுட்

விஷ்ணு விஷாலின் ‘இன்று நேற்று நாளை-2’ பட லேட்டஸ்ட் அப்டேட்..!

  | March 27, 2020 13:03 IST
Cv Kumar

இயக்குநர் ரவிகுமார் படத்திற்கு ஸ்கிரிப்ட் மட்டுமே செய்வார் என்றும், அவரது அஸோசியேட் கார்த்திக் இயக்கவுள்ளதாக தயாரிப்பாளர் சி.வி.குமார் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தயாரிப்பாளர் சி.வி. குமார் வெற்றித்திரைப்படமான ‘இன்று நேற்று நாளை'யின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். 2015-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆர். ரவிகுமார் இயக்கிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிகரீதியாகவும் வெற்றிபெற்றது. 

விஷ்ணு விஷால் மற்றும் கருணாகரன் ஆகியோர் இதன் தொடர்ச்சியிலும் நடிக்க, இயக்குநர் ரவிகுமார் படத்திற்கு ஸ்கிரிப்ட் மட்டுமே செய்வார் என்றும், அவரது அஸோசியேட் கார்த்திக் இயக்கவுள்ளதாகத் தயாரிப்பாளர் சி.வி.குமார் கூறியுள்ளார். மேலும் ஹிப் ஹாப் தமிழாவுக்கு பதிலாக ஜிப்ரான் இசையமைக்கவும், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யவும் ஒப்பந்தமாகியுள்ளனராம்.

தற்போது இப்படத்தின் அப்டேட் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. "ஸ்கிரிப்ட் இறுதி கட்டத்தில் இருக்கிறது. இயக்குநர் ரவிக்குமார் நேற்று காலை எங்களுக்கு முதல் வரைவை அனுப்பியுள்ளார். ஸ்கிரிப்ட் அதன் சிக்கலான காரணத்திற்காகவும், தமிழர்களின் சின்னமான திரைப்படமான அயலான் இயக்க பணியினாலும் தாமதமாகிறது. ஸ்கிரிப்ட் மிகவும் நன்றாகவும் பெருங்களிப்புடனும் வந்துள்ளது. மேலும், பார்வையாளர்களுக்கு அது ஒரு விருந்தாக அமையவுள்ளது” என்றும் தயாரிப்பாளர் சி.வி. குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்