முகப்புகோலிவுட்

‘ராட்சசன்’ படத்தின் VFX BREAKDOWN வீடியோ

  | December 22, 2018 20:50 IST
Ratsasan Movie

துனுக்குகள்

 • இதில் விஷ்ணு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்
 • ‘கிரிஸ்டோபர்’ எனும் மிரட்டலான வில்லன் வேடத்தில் சரவணன் நடித்திருந்தார்
 • இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது
விஷ்ணு விஷால் நடித்து இந்த ஆண்டு (2018) அக்டோபர் மாதம் வெளியான படம் ‘ராட்சசன்'. ராம்குமார் இயக்கியிருந்த இதில் விஷ்ணு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார்.

‘கிரிஸ்டோபர்' எனும் மிரட்டலான வில்லன் வேடத்தில் சரவணன் நடித்திருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இதற்கு பி.வி.ஷங்கர் ஒளிப்பதிவு செய்திருந்தார், சான் லோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி - ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது.
 

இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில், இப்படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை ‘சன் டிவி' கைப்பற்றியது. தற்போது, இயக்குநர் ராம்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் படத்தின் VFX BREAKDOWN வீடியோவை வெளியிட்டுள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com