முகப்புகோலிவுட்

ட்விட்டரில் சாதனைப்படைத்துள்ள அஜித்தின் விஸ்வாசம்! மகிழ்ச்சியில் தல ரசிகர்கள்!!

  | August 24, 2019 11:15 IST
Thala

துனுக்குகள்

  • சிவா இயக்கத்தில் வெளியான படம் விஸ்வாசம்
  • 200கோடிக்கும் மேல் வசூல் சாதனைப்படைத்தது இப்படம்
  • அஜித் நடித்த படங்களிலே விஸ்வாசம் அதிகம் வசூல் செய்த படமாகும்
அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த படம் ‘விஸ்வாசம்'.  இந்தாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட இப்படம் உலகெங்கிலும் உள்ள அஜித் ரசிகர்களுக்கு அகச்சிறந்த விருந்தாக அமைந்தது. தமிழ்நாட்டை பெறுத்தவரை 200 கோடிக்கு மேல் வசூல் சாதனைப்படைத்து முன்னணியில் இருந்தது.
 
அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் ஏற்படுத்திய சமூகவலைத்தளங்களில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். தந்தை மகள் பாசத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படம் பாடல்கள், டிரைலர், டீசர் ஆகியவை யூடியூப்பில் சாதனை படைத்தது.
 
தற்போது ட்விட்டரிலும் விஸ்வாசம் சாதனை படைத்துள்ளது. 2019ம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை ட்விட்டரில் அதிக ஹேஷ்டேக் பயன்படுத்திய பெயர்கள் வெளியாகியுள்ளது. இதில் முதல் இடத்தில் விஸ்வாசம் பிடித்துள்ளது. இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மீண்டும் விஸ்வாசம் என்கிற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.
 
 
 
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்