முகப்புகோலிவுட்

பிக் பாஸ் 4-ல் பங்கேற்கும் பிரபலமான இளம் ஹீரோ..?

  | September 11, 2020 00:03 IST
Rio Raj

இப்போது, பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் 4'  இன்னும் சில வாரங்களில் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்நிலையில், இந்த சீசனில் போட்டியாளர்கள் யார் என்பதில் ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் உள்ளது. ஏற்கனவே டிக் டோக் புகழ் இலக்கியா தன்னை அணுகியதாகவும், மேலும் ரம்யா பாண்டியன், கிரண் ரத்தோட், சிவானி நாராயணன், புகழ் மற்றும் இன்னும் சிலர் இடம் பெறுவதாக கூறப்படுகிறது.

இப்போது, ‘பிக் பாஸ் 4' போட்டியாளர்களில் நடிகர் ரியோ ராஜும் ஒருவர் என்பதும், அவரது ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி தொகுப்பாளராக(VJ) தனது பயணத்தை தொடங்கிய ரியோ, சீரியல்களிலும், சிறப்பான ரியாலிட்டி ஷோக்களிலும் மேலும் தன்னை மெருகேற்றிக்கொண்ட அவர், சிவகார்த்திகேயன் தயாரித்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா' படத்தில் கதாநாயகனாக நடித்து பெரிய திரையில் புதிய பயணத்தை தொடங்கினார்.

3nrvh2b8

இப்போது, பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ‘பிளான் பண்ணி பண்ணனும்' திரைப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

சமீபத்தில், ரியோ ‘ரித்தி' எனும் தனது 6 மாத குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டிருந்தார். ரியோ 2017 ஆம் ஆண்டில் ஸ்ருதியை திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com