முகப்புகோலிவுட்

“Gymக்கு போகும் வரை” ஆறுதலுக்காக ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட ரகுல்.!

  | July 20, 2020 20:37 IST
Rakul Preet Singh

தற்போது, சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் ‘இந்தியன்-2' மற்றும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘அயலான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங் டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தமிழில் எச். வினோத் இயக்கத்தில் கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று', செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவின் ‘என்.ஜி.கே' போன்ற சில பிரபலமான திரைப்படங்களில் நடித்து தமிழில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளார்.

தற்போது, சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் ‘இந்தியன்-2' மற்றும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘அயலான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கிவரும் அவர் தனது உடற்பயிற்சி, யோகா, தம்பியுடனான விளையாட்டு, சமூகவலைதள சவால்கள் என வழக்கமாக வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு, ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருக்கிறார்.

தற்போது அவர், Gym செல்வதை எந்த அளவிற்கு இழந்துவருகிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். இந்த கொரோனா லாக்டவுனுக்கு முன்பாக கட்டுக்கோப்பான உடலமைப்பைக் கொண்ட ஹாட்டான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம்பக்கத்தில் பகிர்ந்த அவர் “ஜிம்குக்கு செல்ல காத்திருக்கிறேன். அதுவரை மிகவும் ஃபிட்டாக உணர ஒரு த்ரோபேக்” என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் விரலாகிவருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com