முகப்புகோலிவுட்

'மீண்டும் களமிறங்கும் வால்டர்' - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..!!

  | June 22, 2020 08:47 IST
Walter

துனுக்குகள்

 • ‘நட்டி' நடராஜன் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில்
 • வெளியான சில நாட்களிலேயே கொரோனா காரணமாக இந்த திரைப்படம் தடைபட்டது
 • தற்போது OTT தளத்தில் இன்று முதல் வெளியாகும் என்று படக்குழு தற்போது
யு. அன்பரசன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் ‘வால்டர்'. சிபி சத்யராஜ் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இப்படம் ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் கதையாகும். இப்படத்தை 11:11 ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் ஷ்ருதி திலக் தயாரிக்கிறார்.

இப்படத்தில் ‘நட்டி' நடராஜன் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும், ஷிரின் கன்ச்வாலா, சனம் ஷெட்டி, பாவா செல்லதுரை, அபிஷேக் வினோத், ரித்விகா மற்றும் சார்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ராசமதி ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா படத்தொகுப்பு செய்கிறார். மேலும், விக்கி இப்படத்தின் சண்டைக் காட்சிகளை இயக்க, தர்ம பிரகாஷ் இசையமைக்கிறார்.

நடிகர் சத்யராஜுக்கு ‘வால்டர் வெற்றிவேல்' திரைப்படம் ஒரு மைல்கல்லாக அமைந்தது. அதேபோல் அவரின் மகனான சிபிக்கும் ‘வால்டர்' திரைப்படம் திருப்புமுனையாக அமையும் என்ற பல எதிர்பார்ப்புகளுடன் கடந்த மார்ச் 13ம் தேதி இந்த படம் வெளியானது. யூகித்ததை போலவே சிபிக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வெளியான சில நாட்களிலேயே கொரோனா காரணமாக இந்த திரைப்படம் தடைபட்டது. 
இந்நிலையில் இந்த திரைப்படம் தற்போது OTT தளத்தில் இன்று முதல் வெளியாகும் என்று படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரசிகர்கள் இன்று முதல் இந்த படத்தை SUN NXT தளத்தில் பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com