முகப்புகோலிவுட்

“ரஜினியோடு நடிக்க வேண்டும்” வடசென்னை நாயகியின் ஆசை!

  | August 23, 2019 15:59 IST
Aishwarya Rajesh

துனுக்குகள்

  • நம்ம வீட்டு மாப்பிள்ளை படத்தில் நடித்து வருகிறார் இவர்
  • தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் இவர்
  • ரஜினியோடு நடிக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார் இவர்
கடந்த ஆண்டு ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தை அடுத்து அவர் நடித்த  அடுத்தடுத்த படங்கள் வெற்றி வாகை சூடிவருகிறது. இவர் நடிப்பில் வெளியான ‘கனா' ரசிகர்களின் பேராதரவு பெற்று பல்வேறு விருதுகளையும் கைபற்றியது. இதனை அடுத்து இவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை' படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்து வருகிறார். இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்து மலையாளம், தெலுங்கு என வெவ்வேறு மொழிகளிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.  சமீபத்தில் கதை தேர்வு குறித்து பேசிய ஐஷ்வர்யா,
 
eu029hng

“ஒரு படத்துல என்னுடைய கேரக்டர், அது என்ன சொல்லப்போகுது, அதுல எவ்வளவு முக்கியத்துவம் இருக்குனு தான் பார்ப்பேன். `நடிச்சா ஹீரோயின்தான்' என்பதில்லை. `நம்ம வீட்டுப் பிள்ளை' படத்துல தங்கச்சி கதாபாத்திரம் ரொம்ப சூப்பரா இருக்கும். இது படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும். அதே மாதிரி, `கனா' படத்துல சத்யராஜ் சார்தான் ஹீரோ. எல்லா படத்துலேயும் ஒருவருடைய கதாபாத்திரத்தை கேரக்டர்தான் முடிவு பண்ணும்” என்றார். உங்களுக்கு யாரோடு நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் “நான் ரஜினிக்கு பெரிய ரசிகை. அவர்கூட ஒரு படத்துலயாவது நடிக்கணும்னு ஆசை. இனியாவது நடக்குதான்னு பார்க்கலாம்'. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
 
 
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்