முகப்புகோலிவுட்

மாஸ்டர் ட்ரைலர் “மரண மாஸ்ஸா இருக்கு” - 6 முறை பார்த்ததாக கூறும் நடிகர்.!

  | May 18, 2020 14:56 IST
Master

ரசிகர்கள் அனவரும் ட்ரைலரை விஜயின் பிறந்தநாளான ஜூன் 22-ஆம் தேதி எதிர்பார்க்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்க 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' படத்தின் மூலம் திரையில் அறிமுகமான அர்ஜுன் தாஸ் பார்வையாளர்களிடையே பிரபலமானார். இப்படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்த அவர் தனது மிரட்டலான நடிப்பால் பார்வையாளர்களை திகைக்க வைத்தார். அதையடுத்து லோகேஷ் இயக்கத்தில் ‘தளபதி' விஜ நடிக்கும் 'மாஸ்டர்' படத்தில் அர்ஜுன் தாஸ் மீண்டும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நேற்று, அர்ஜுன் தாஸ் இன்ஸ்டா லைவில் ரசிகர்களுடன் உரையாடினார். அந்த நேரலை அரட்டையின் போது, அர்ஜுன் 'மாஸ்டர்' ட்ரைலர் பற்றிய ஒரு ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கிட்டத்தட்ட 6 முறை ட்ரைலரை பார்த்துள்ளார்.

ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “ட்ரைலருக்காக ரசிகர்கள் காத்திருப்பது மதிப்புக்குரியது” என்று அர்ஜுன் உறுதியளித்துள்ளார். மேலும் “ட்ரைலரை நான் 6 முறை பார்த்துவிட்டேன், மரண மாஸாக இருக்கிறது. குறிப்பாக ட்ரெய்லரில் விஜய் ஒரு மாஸ் வசனத்தை பேசியுள்ளார், அதை பார்த்தால் ரசிகர்கள் கிரேஸியக மாறிவிடுவார்கள். 'மாஸ்டர்' நிச்சயம் முதலில் திரையரங்குகளில் தான் வெளியாகும், ஓ.டி.டியில் வாய்ப்பில்லை, மேலும் 'மாஸ்டர்' இன் அதிகாலை ஷோவை ரசிகர்களுடன் ரசிக்க காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், படத்தின் ரிலீஸ் தேதி உறுதியான பிறகு தான் ட்ரைலர் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியிடப்படும் என்று கூறினார்.

‘மாஸ்டர்' படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் கடந்த வாரம் மீண்டும் தொடங்கி சீராக நடந்து வருகிறது. இதற்கிடையில், ரசிகர்கள் அனவரும் ட்ரைலரை விஜயின் பிறந்தநாளான ஜூன் 22-ஆம் தேதி எதிர்பார்க்கின்றனர்.

இயக்குநர் அட்லீயின் முதல் முறையாக தயாரிக்கும் 'அந்தகாரம்' படத்திலும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதற்கு பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com