முகப்புகோலிவுட்

'எல்லாம் நல்லதுக்கேனு போயிட்டே இருக்கணும்' - சின்னக் கலைவாணர் பகிர்ந்த வீடியோ

  | April 06, 2020 11:43 IST
Apj Abdul Kalam

துனுக்குகள்

 • கனவு காணுங்கள் அதை மெய்ப்படுத்துங்கள் என்று அனுதினம் பேசிவந்த மனிதன்
 • அவர் மீது கொண்ட அன்பால் அவர் மறைவுக்கு பிறகும் அப்பணியை
 • இந்தியா மட்டும் இன்றி உலகளவில் நிலவும் அசாதாரண சூழலை
Avul Pakir Jainulabdeen Abdul Kalam சுருக்கமாக APJ அப்துல் கலாம், என்று மக்கள் அன்போடு அழைக்கும் அந்த மாமனிதர் தான் சுதந்திர இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக 2002 முதல் 2007ம் ஆண்டு வரை பணியாற்றினார். ராமநாதபுரத்தில் கல்வி பயின்ற இவர், திருச்சியில் கல்லூரி படிப்பை முடித்தார். இந்த கனவுகளின் நாயகன் மாபெரும் அறிவியலாளர் மட்டும் இன்றி ஒரு சிறந்த தமிழ் பற்றாளராகவும் திகழ்ந்தார். தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அது இந்தியாவோ வெளிநாடோ தமிழ் இலக்கியங்களை பற்றி இவர் பேச மறந்ததில்லை. 

2020ம் ஆண்டு இந்திய நாடு வல்லரசாகும், இளைஞர்களே கனவு காணுங்கள் அதை மெய்ப்படுத்துங்கள் என்று அனுதினம் பேசிவந்த மனிதன். இயற்கையின் மீது பெரும் ஆசை கொண்ட இவரோடு அடிக்கடி உறவாடி பல மரக்கன்றுகளை பாதுகாப்பான இடங்களில் நட்டத்தில் பெரிய பங்குண்டு திரைப்பிரபலம் சின்னக்கலைவனர் விவேக்கிற்கு. அவர் மீது கொண்ட அன்பால் அவர் மறைவுக்கு பிறகும் அப்பணியை (மரக்கன்று நடும் பணி) தொடர்ந்து செய்து வருகின்றார் திரு. விவேக். 

இந்நிலையில் தற்போது இந்தியா மட்டும் இன்றி உலகளவில் நிலவும் அசாதாரண சூழலை எதிர்கொள்ள அவ்வப்போது தனது சமூக வலைத்தளம் மூலம் பல விழிப்புணர்வு வீடியோ மற்றும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் விவேக். இந்நிலையில் அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அய்யா அப்துல் கலாம் "எந்த சூழலிலும் நமது மனதைரியத்தை விட்டுவிட கூடாது என்று பேசும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com