முகப்புகோலிவுட்

"நெஞ்சுநெகிழ் நன்றி சொல்வோமா..?" - சின்னக் கலைவாணரின் ட்வீட்

  | March 21, 2020 14:54 IST
Vivek

துனுக்குகள்

  • பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீனாவை தான் பாதித்துள்ளது
  • வைரஸ் தொற்று. உலகம் முழுக்க சுமார் 130-க்கும் மேற்பட்ட நட்டுகளில்
  • பலிவாங்கியுள்ளது இந்த கொரோனா தொற்று
பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீனாவை தான் பாதித்துள்ளது, என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆனந்தமாய் வலம்வந்த இந்தியர்களை இன்று அறை தாண்ட விடமால் அடக்கி விட்டது கொரோனா என்னும் வைரஸ் தொற்று. உலகம் முழுக்க சுமார் 130-க்கும் மேற்பட்ட நட்டுகளில் 2,50,000 பேருக்கு மேல் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 100 அல்ல 200 அல்ல சுமார் 11,000-க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கியுள்ளது இந்த கொரோனா தொற்று. 

மத்திய மாநில அரசுகள் எத்துணை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், மக்களாகிய அனைவருமே அதை தீவிரமாக கடைபிடித்தால் மட்டுமே இந்த நோயை நம்மால் எதிர்கொண்டு வெல்லமுடியும் என்பது எல்லாரும் அறிந்துகொள்ள வேண்டிய நிதர்சனமான உண்மை. இந்நிலையில் பல திரை நட்சத்திரங்கள் தங்கள் புகழை பயன்படுத்தி தங்களால் இயன்ற விழிப்புணர்வை மக்களுக்கு அளித்து வருகின்றனர். அந்த வகையில் அய்யா கலாம் அவர்களின் வழி நடக்கும் நடிகரும் சமூக ஆர்வலருமான திரு. விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 18ம் தேதி செய்தி ஒன்றை வெள்ளியிட்டுள்ளார்.  
     
அந்த பதிவில் "8 கோடிமக்கள்..! 3 அண்டை மாநில எல்லைகள்..! தினம் விமானவழியில் ஆயிரக்கணக்கான பயணிகள்.!சவால்களை எதிர் கொண்டு பணிபுரியும் அமைச்சர், சுகாதாரத் துறை, தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்யும் மருத்துவர்கள், செவிலியருக்கும் நெஞ்சுநெகிழ் நன்றி சொல்வோமா?" என்று கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்