முகப்புகோலிவுட்

"நீங்கள் இல்லாமல் நம் குடும்பம் முழுமை பெறாது" - அப்பாவை நினைவுகூர்ந்த அமலா பால்..!

  | September 20, 2020 10:27 IST
Amala Paul

துனுக்குகள்

 • நடிகை அமலா பால் ‘மைனா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்
 • கடைசியாக ரத்னகுமார் இயக்கிய ‘ஆடை' திரைப்படத்தில் திரையில் காணப்பட்டார்
 • கடந்த செப்டம்பர் 18ம் தேதி அவருடைய தந்தையின் பிறந்த நாள் என்பது
நடிகை அமலா பால் ‘மைனா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளைப் பெற்ற அவர், தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, ‘தளபதி' விஜயுடன் தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, ராட்சசன் என பல சூப்பர்ஹிட் திரைப்படங்களில் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துளார்.

கடைசியாக ரத்னகுமார் இயக்கிய ‘ஆடை' திரைப்படத்தில் திரையில் காணப்பட்டார். அதில் தைரியமான பாத்திரத்தை ஏற்று படம் முழுவதும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த லாக்டவுனுக்கு இடையில் பல விஷயங்களை தனது பிந்தொடர்பாளர்களுடன் பகிர்ந்து வரும் அவர், கர்ப்பிணி யானை, சாத்தான் குளம் சம்பவம், சுஷாந்த் தற்கொலை, பல பிரபல நடிகர்களின் மரணம் என அனைத்துக்கும் தனது கண்டனங்களையும், வருத்தங்களையும், கருத்துக்களையும் பகிர மறக்கவில்லை. 

இந்நிலையில் throwback புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனது தந்தையை மிஸ் செய்வதாக குறிப்பிட்டுள்ளார். நமது குடும்பம் நீங்கள் இல்லாமல் முழுமை பெறாது என்று தெரிவித்து நெகிழ்ந்துள்ளார். கடந்த செப்டம்பர் 18ம் தேதி அவருடைய தந்தையின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com