முகப்புகோலிவுட்

'ஓ அதுக்கு இதான் அர்த்தமா..?' - இன்று ஒரு சொல் தந்த மதன் கார்க்கி

  | April 04, 2020 17:02 IST
Karky Research Foundation

துனுக்குகள்

 • முதல் பாடலின் வயது தான் அவருடைய புதல்வன் மதன் கார்க்கியின் வயது
 • 'கண்டேன் காதலை' என்ற படத்தில் 'ஓடோடி போறேன்' என்ற பாடலை
 • ஆங்கில சொற்களுக்கு தமிழ் மொழி பெயர்ப்பை வழங்கி வருகின்றார்
"ஒரு பொன்மலை பொழுது" என்ற பாடல் மூலம் அறிமுகமான பாடலாசிரியர் தான் இன்று கவிப்பேரரசு என்று போற்றப்படும் கவிஞர் வைரமுத்து. திரையிசை பாடல்கள் மட்டும் இல்லாமல் இவர் தமிழ் மொழிக்கு தந்த காவியங்கள் பல. கவிப்பேரரசு எழுதிய முதல் பாடலின் வயது தான் அவருடைய புதல்வன் மதன் கார்க்கியின் வயது என்பது பலர் அறிந்த விஷயம். மீன் குஞ்சிற்கு நீந்த கற்றுத்தர தேவை இல்லை என்பதை உணர்த்துவது போல தற்போது மாபெரும் கவிஞராக வலம்வருகிறார் மதன். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதை நிரூபிக்கும் வண்ணம் தமிழ் மொழியில் பல ஆய்வுகளையும் செய்து வருகின்றார் அவர்.

2009ம் ஆண்டு வெளியான 'கண்டேன் காதலை' என்ற படத்தில் 'ஓடோடி போறேன்' என்ற பாடலை எழுதியதன் மூலம் அவர் திரையுலகில் அறிமுகமானார். தனது பாடல்களில் அடிக்கடி புதுமையை புகுத்தும் இவர் 2014ம் ஆண்டில் மட்டும் 32 படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2017ம் ஆண்டு வெளியான "விநோதன்" என்ற படத்தில் இவர் எழுதிய மேக ரகமே என்ற பாடல் தமிழில் வெளியான முதல் palindrome பாடல் என்று கூறப்படுகிறது. 

தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மதன் கார்க்கி, karky research foundation என்ற நிறுவனம் மூலமாக ஆங்கில சொற்களுக்கு தமிழ் மொழி பெயர்ப்பை வழங்கி வருகின்றார். இந்நிலையில் அந்த நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் weapon என்ற சொல்லுக்கு தமிழ் அர்த்தம் கொடுத்துள்ளது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com