முகப்புகோலிவுட்

"எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம்..!!" - தமிழக அரசை சாடும் கமல்

  | May 18, 2020 07:50 IST
Kamalhassan

துனுக்குகள்

 • உலக நாயகனும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன்
 • அவர் மேலும், கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் இழப்பை சரி செய்ய பொருளாதார
 • தற்போது இந்த 20 லட்சம் கோடி சிறப்பு திட்டம் குறித்து சில கேள்விகளை
உலக நாயகனும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ஆரம்ப காலம்தொட்டே அரசியல் நடவடிக்கைகள் குறித்த விஷயங்களில் தனது கருத்துக்களை வெளிப்படையாக அறிவிக்கும் குணமுடையவர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சி வாயிலாக மக்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பேரிழப்பை சரி செய்வதற்காக ரூ. 20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். 

அவர் மேலும், கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் இழப்பை சரி செய்ய பொருளாதார சிறப்பு திட்டங்களை அறிவிக்க உள்ளேன். 'ஆத்மனிர்பார் பாரத் அபியான்' என்ற இந்த திட்டத்திற்கு மொத்தம் ரூ. 20 லட்சம் கோடி வரையில் ஒதுக்கப்படும். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும் என்று கூறினார். 

தற்போது இந்த 20 லட்சம் கோடி சிறப்பு திட்டம் குறித்து சில கேள்விகளை முன்வைத்துள்ளார் கமல்ஹாசன். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு?. மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே  எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம். ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு." என்று குறிப்பிட்டுள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com