முகப்புகோலிவுட்

உன் MASTER plan தான் என்ன..? - விஜய்சேதுபதியை கேள்வி கேட்கும் நடிகர் பார்த்திபன்..!!

  | July 09, 2020 17:58 IST
Tughlaq Durbar First Look

துனுக்குகள்

 • நேற்று இந்த திரைப்படத்தின் First லுக் வெளியான நிலையில் இன்று இந்த
 • 'கவிஞர்' பார்த்திபன் தற்போது அழகிய மடல் ஒன்றை எழுதியுள்ளார்
 • நானும் ரவுடிதான்,நீயும் ரவுடிதான்.இன்னைக்கு உன் துக்luck தர்பார் எவ்வளவு
டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார் விஜய்சேதுபதி. தயாரிப்பாளர்  லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்  மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘துக்ளக் தர்பார்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் நடிக்க இவர்களுடன் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நேற்று இந்த திரைப்படத்தின் First லுக் வெளியான நிலையில் இன்று இந்த படத்தில் இருந்து பல சுவாரசியமான புகைப்படங்கள் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த படத்தில் அரசியல் தலைவராக வரும் பார்த்திபன் அவர்களிடம் பவ்யமாக கையைக்கட்டிக்கொண்டு நிற்கும் தொண்டராக காட்சியளிக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. 

வெளியான இந்த போஸ்ட்டரை பார்த்த 'கவிஞர்' பார்த்திபன் தற்போது அழகிய மடல் ஒன்றை  எழுதியுள்ளார். அந்த மடலில் "பார்த்திபன்:நானும் ரவுடிதான்,நீயும் ரவுடிதான். இன்னைக்கு உன் துக்luck தர்பார் எவ்வளவு பெரிய Level-ல இருக்குன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுகிட்டு”இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா”ங்கிற Range-க்கு பவ்யமா கையை கட்டிகிட்டு நின்னா என்ன அர்த்தம்.? உன் MASTER plan தான் என்ன?" என்று தனது பணியில் எழுதியுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com