முகப்புகோலிவுட்

'யார் இந்த ஹன்சிகா மோட்வானி..?' - வெளியானது அசத்தலான குறும்படம்..!!

  | May 29, 2020 10:02 IST
Hansika Motwani

துனுக்குகள்

 • சிறுவயதில் விளம்பர நிகழ்ச்சிகள், சின்னத்திரை நாடகங்கள் தொடங்கி
 • கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த ஹன்சிகா
 • இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் தனக்கென தனி youtube
சிறுவயதில் விளம்பர நிகழ்ச்சிகள், சின்னத்திரை நாடகங்கள் தொடங்கி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக தோன்றி பின்னர் முன்னணி நடிகையாக மாறியவர் தான் ஹன்சிகா மோட்வானி. 'ஹவா' என்ற ஹிந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமா அறிமுகமான இவர் 2007ம் ஆண்டு வெளியான அல்லு அர்ஜுனின் 'Desamuduru' படத்தின் மூலம் கதையின் நாயகியாக உயர்ந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு Film Fare வழங்கும் சிறந்த அறிமுக நடிகைக்கான விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த ஹன்சிகா 2011ம் ஆண்டு வெளியான தனுஷின் 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகமான குறுகிய நாட்களில் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஹன்சிகா. பிரபு தேவா, விஜய், சிம்பு, ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். தற்போது தமிழில் இவர் நடித்து வரும் படம் “மஹா”. 

இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் தனக்கென தனி youtube சேனல் ஒன்றை தொடங்கி அதில் தனது திறமைகளை அவர் வெளிப்படுத்தி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. சில தினங்களுக்கு முன்பு தனது ஓவியத் திறமையை ஒரு காணொளி மூலம் வெளிப்படுத்திய ஹன்சிகா தற்போது யார் இந்த ஹன்சிகா என்ற தலைப்பில் தன்னை பற்றி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com