முகப்புகோலிவுட்

"உங்களுக்கு என்ன தகுதி இருக்கு" - கங்கனாவை சாடும் சூப்பர் மாடல் மீரா..!!

  | June 30, 2020 15:30 IST
Nepotism

துனுக்குகள்

  • மாடல் அழகியும் - நடிகையுமாக மீரா மிதுன் ‘8 தோட்டாக்கள்
  • எப்போதும் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் மீரா
  • தனது கோவத்தை பிரபல நடிகை கங்கனா மீது திரும்பியுள்ளார்
மாடல் அழகியும் - நடிகையுமாக மீரா மிதுன் ‘8 தோட்டாக்கள், ‘தானா சேர்ந்த கூட்டம்' மற்றும் போதை ஏரி புத்தி மாறி' போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் ‘உலக நாயகன்' கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் - 3' நிகழ்ச்சியில் பங்கேற்றதிலிருந்து அவர் மிகவும் பிரபலமானார். 

எப்போதும் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் மீரா மிதுன், சில தினங்களுக்கு முன்பு பதிவிட்ட ட்வீட் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதில் “பயனற்ற அரசு.! தமிழ்நாடு அதன் பார்வை அழிவில். பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக அரசாங்கத்தை கலைக்கவும். ஒரு ஆணையை நிறைவேற்றி, என்னை முதல்வராக்குங்கள். ஒரு வாரத்தில் நான் முழு சூழ்நிலையையும் கட்டுக்குள் கொண்டு வருகிறேன், மக்களின் உயிரைக் காப்பாற்றுகிறேன், 1 மாதத்தில் அனைத்து குற்றவாளிகளும் சிறையில் இருப்பார்கள், 3 மாததில் ஊழல் ஒழியும், 6 மாதங்களின் இந்திய பொருளாதாரம் உயரும்” என்று அவர் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினார். 

இந்நிலையில், தற்போது  மீரா தனது கோவத்தை பிரபல நடிகை கங்கனா மீது திரும்பியுள்ளார். Nepotism குறித்து பேசிய கங்கனாவிற்கு பதில் அளிக்கும் வகையில் அவர் வெளியிட்ட பதிவில். "நான் Nepotism என்ற விஷயத்தில் இருந்து மீண்டு வந்தவள். மேலும், ஜெயலலிதா அம்மையாரின் கதாபாத்திரம் ஏற்று நடிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது. என்று கட்டமாக ட்வீட் செய்துள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com