முகப்புகோலிவுட்

'அவருக்கு ஏன்பா அனுப்பின' - மாறி மாறி ராஜமௌலியை கலாய்க்கும் ராம் மற்றும் ஜூனியர் NTR

  | March 27, 2020 12:59 IST
Rajamouli

துனுக்குகள்

 • தமிழில் ரத்தம், ரணம், ரௌத்திரம் என்ற பெயரில்
 • தற்போது இதற்கு பதில் அளித்துள்ள ராம் சரண்
 • கண்டிப்பா இன்னைக்கு மாலை 4 மணிக்கு வந்துரும் என்று
பாகுபலியின் வெற்றியை அடுத்து ராஜமௌலி இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் RRR. தமிழில் ரத்தம், ரணம், ரௌத்திரம் என்ற பெயரில் இந்த படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 8ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று ராம் சரண் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ஒரு surprise வீடியோ ஒன்றை இன்று காலை பரிசளிக்க உள்ளதாக நேற்று இரவு ஜூனியர் என்.டி.ஆர் கூறினார். 

ஆனால் இந்த பரிசை பற்றி கருத்துக்கேட்க நேற்று இரவு அந்த வீடியோவை தான் ராஜமௌலிக்கு அனுப்பி வைத்ததாகவும். அதன் பிறகு தான் அனுப்பியது ராஜமௌலிக்கு, அவரை பற்றி தான் உங்களுக்கு தெரியுமே அந்த வீடியோ வர கொஞ்சம் லேட் ஆகும் சாரி ராம் பிரதர் என்று இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். 

தற்போது இதற்கு பதில் அளித்துள்ள ராம் சரண், "என்னது.. ஏன் அதை அவருக்கு அனுப்பினீங்க, என்னோட பரிசு இன்னைக்கு வந்துடுமா...? என்று கிண்டலாக கேட்க, நான் இப்போதான் அவரோட பேசினேன் கண்டிப்பா இன்னைக்கு மாலை 4 மணிக்கு வந்துரும் என்று அவர் கூறியதாக ஜூனியர் என்.டி.ஆர் பதிலளித்துள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com