முகப்புகோலிவுட்

"என்று முடியும் கொரோனாவின் கலவரம்..!!" - தாடியுடன் காத்திருக்கும் நடிகர் 'பரோட்டா சூரி'

  | May 30, 2020 07:37 IST
Corona Lock Down

துனுக்குகள்

 • கொரோனா அச்சத்தில் உலகமே மூழ்கியுள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு
 • இந்நிலையில் நேற்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "தற்போதைய நிலவரம்
 • சூரி தற்போது சசிக்குமார் இயக்கும் ஒரு படத்திலும், வெற்றிமாறன் இயக்கும்
கொரோனா அச்சத்தில் உலகமே மூழ்கியுள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இரண்டு நாளுக்கு ஒரு முறை சரியாக தனது கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வந்தார் நடிகர் சூரி. உலகம் எங்கும் பரவி வரும் இந்த கொரோனா காரணமாக பல லட்சம் மக்கள் உலகளவில் இறந்துள்ளனர். அதே சமயம் கோடிக்கணக்கில் மக்கள் இந்த நோயின் காரணமாக உலக முழுக்க பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் நேற்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "தற்போதைய நிலவரம் என்று முடியும் கொரோனாவின் கலவரம்..." என்று கூறி தாடியுடன் காட்சியளிக்கும் தன்னுடைய புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். 

கடந்த 2019ம் ஆண்டு பிரபல நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான சங்கத்தமிழன் என்ற படத்தில் நடித்த சூரி தற்போது சசிக்குமார் இயக்கும் ஒரு படத்திலும், வெற்றிமாறன் இயக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com